Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தளிநாதர் கோயிலில் அன்னதானம் ... வைகையில் 270 விநாயகர் சிலைகளை கரைக்க திட்டம் வைகையில் 270 விநாயகர் சிலைகளை கரைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ஆன்லைன் மூலம் பதிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ஆன்லைன் மூலம் பதிவு

பதிவு செய்த நாள்

16 செப்
2015
11:09

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்கும் விடுதி களை தொடர்ந்து, தற்போது, ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைன் (இணையம்) மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆர்ஜித சேவைகளை உரிய கட்டணம் செலுத்தி செய்து வருகின்றனர்.கடந்த மாதம் வரை சேவைகள் செய்ய பக்தர்கள் நேரில் வந்து சேவைக்கு ஏற்ற வாறு முன்கூட்டியே பணம் செலுத்தி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக, கடந்த ஒன்றாம் தேதி முதல், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பஞ்சாமிர்தம், சந்தனக் காப்பு, கல்யாண உற்சவம் உட்பட, ஒன்பது வகையான சேவைகளுக்கு இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தலாம். மேற்கண்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள், 24 மணி நேரத்திற்கு முன்னதாக, www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், மூன்று மாதங்களாக தேவஸ்தான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு இணைய தளம் மூலம் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இம்மாதம் முதல், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளும் இனி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar