திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று அன்னதானத் திட்டம் துவக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார்இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் தனலெட்சுமி(எ)சாந்தி, ஆ.பி.சீ.அ.கல்லூரி செயலர் ராமேஸ்வரன், பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தினசரி 50 பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.