Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தஞ்சாவூர் விநாயகர் சிலைகள் 59 ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு! சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண மடத்தில் 14 வது தேசிய இளைஞர் தின கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
ராமகிருஷ்ண மடத்தில் 14 வது தேசிய இளைஞர் தின கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
05:09

சென்னை: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சார்பில், சென்னை ராமகிருஷ்ண மடத்தில் 14வது தேசிய இளைஞர் தின கொண்டாடப்படுகிறது. மனிதா! எல்லாப் பொறுப்புகளையும் உன் தோள்களின் மீதே சுமந்து கொள். உன் விதியை உருவாக்குபவன் நீயே என்பதைத் தெரிந்து கொள். - சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை வெறும் வார்த்தைகளாக இல்லாமல், அதை செயல் படுத்தும் விதத்தில் வரும் 2016, ஜனவரி 12, சுவாமிஜியின் பிறந்த நாள் விழாவான தேசிய இளைஞர் தினத்தை கொண்டாட ஒரு செயல்திட்டத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் அறிமுகப்படுத்துகிறது. சுவாமிஜி வலியுறுத்திய பொறுப்புள்ள தனிமனிதனை உருவாக்கி, பொது நலனுக்காக சேவையைச் செய்வதற்குச் சேமிப்பும் சேவையும் சுவாமிஜியின் பெயரால் என்ற திட்டத்தின் செயல்வடிவம் இதோ:

*உங்கள் பள்ளி, கல்லூரி, குடியிருப்பு, தொழிற்சாலை, மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களில் சுவாமி விவேகானந்தரின் படத்தை அலங்கரித்து வையுங்கள். தினமும் சுவாமிஜியின் செய்தி ஒன்றை எழுதலாம்.

*பாதுகாப்பான ஓர் உண்டியலை சுவாமிஜி திருவுருவப் படத்தின் முன்பு வைத்து இந்தத் திட்டத்தைப் பற்றி விளக்கவும். உண்டியலில் தினமும் ஒரு ரூபாயாவது செலுத்துமாறு மாணவர்கள்/ தொழிலதிபர்கள்/தொழிலாளிகள்/ மருத்துவ மனைக்கு வருபவர்கள்/ பணியாளர்கள்/ உங்கள் வீட்டின் அங்கத்தினர்கள் ஆகிய எல்லோரிடமும் எடுத்துச் சொல்லி இந்தச் சேமிப்பில் ஊக்கப்படுத்தலாம்.தனி நபர்களும் இதில் பங்கேற்கலாம்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்தி இந்தியாவின் பெருமையை உலகில் நிலைநாட்டிய தினம் செப்டம்பர் 11. அதை நினைவுகூர்ந்து, வரும் செப்டம்பர் 11 முதல் நவம்பர் 30 வரை, மொத்தம் 81 நாட்களில் மேற்கூறியவாறு சேமிக்கலாம்.. இந்தப் புனிதப் பணியில் நீங்கள் ஈடுபட்டுத் தொடங்கியுள்ளதை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தெரிவிக்கவும்.

சேமிப்பு துவக்கம்: செப்டம்பர் 11, 2015 முதல் நவம்பர் 30 வரை- மொத்தம்- 81 நாட்கள்.

இவ்வாறு சேர்த்த மொத்தப் பணத்தைக் கொண்டு உங்கள் பள்ளிக்கோ, நிறுவனத்திற்கோ, உங்கள் பகுதியிலோ ஏதேனும் ஒரு பயனுள்ள பொதுச் சேவையைச் செய்யுங்கள். உதாரணமாக, இதோ சில பரிந்துரைகள்:

பள்ளிகள்: வகுப்பறை/ நூலகம்/ கழிவறை ஆகியவற்றை மேம்படுத்த அந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

தொழிற்சாலைகள்: தொழிலாளர்களின் ஓய்வறை/ ஏழைகளின் பிள்ளைகளுக்குச் சீருடை/ மருத்துவம்.

உங்கள் பகுதி குடியிருப்புகள்: சுற்றுப்புறத்தூய்மை/ கோயில்/ நீர் ஆதாரங்கள் போன்றவற்றைச் சீரமைக்கலாம்.

இவ்வாறு நீங்கள் செய்த நற்காரியங்களை எழுதி, புகைப்படங்கள்/ வீடியோக்கள் போன்ற ஆதாரங்களுடன் டிசம்பர் 10-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள். சிறப்பான நற்காரியங்களைச் செய்த பள்ளி/ அமைப்பு/ தனிநபருக்குப் பரிசுகள் ஜனவரி 12, 2016 அன்று வழங்கப்படும்.

பொதுத் தொண்டில் மிகுந்த ஈடுபாடுள்ள  அனைவரையும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டுத் தொண்டாற்ற ஸ்ரீராமகிருஷ்ண மடம் அழைக்கிறது. உங்களது சேமிப்பும் சேவையும் உங்கள் பகுதிகளுக்கு நன்மை தருவதோடு உங்களுக்குப் புண்ணியத்தையும் சேர்க்கும். அத்துடன் சேவைக்கான பரிசையும் வெல்லலாம்..

சிறந்த பள்ளி/ கல்லூரிகளுக்கான பரிசுகள்!


முதல் பரிசு - ரூ. 10,000
இரண்டாம் பரிசு - ரூ. 8000 # 2 நபருக்கு = ரூ. 16,000
மூன்றாம் பரிசு - ரூ. 6000 # 2 நபருக்கு = ரூ. 12,000

சிறந்த நிறுவனம்/ அமைப்பிற்கான பரிசுகள்!


முதல் பரிசு - ரூ. 10,000
இரண்டாம் பரிசு - ரூ. 8000 # 2 நபருக்கு = ரூ. 16,000
மூன்றாம் பரிசு - ரூ. 6000 # 2 நபருக்கு = ரூ. 12,000

சிறந்த இல்லம் / தனி நபருக்கான பரிசுகள்!


முதல்பரிசு -  ரூ. 5000 # 2 நபருக்கு= ரூ. 10,000
இரண்டாம் பரிசு - ரூ. 4000 # 4 நபருக்கு = ரூ. 16,000
மூன்றாம் பரிசு - ரூ. 2000 # 6 நபருக்கு = ரூ. 12,000

தொடர்புக்கு: சுவாமி விமூர்த்தானந்தர், மேலாளர்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை-4
மொபைல்: 98409 87307, 91767 33362, 95660 87690

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar