சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2015 10:09
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி பகுதி பெருமாள் கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரமும் செய்தனர். சிறப்பு வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடந்தது. பூஜைகளை குமார் பட்டாச்சாரியார் செய்தார். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.