Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகரில் தூய சவேரியார் ஆலய தேர் ... காணாமல் போன 2,600 ஆண்டு மஹாவீரர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விலைப்பட்டியல் இல்லாத கோயில் பிரசாத ஸ்டால்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

ரெட்டியார்சத்திரம்: கோயில் பிரசாத ஸ்டால்களில் போதிய விலைப்பட்டியல் அமைக்காமல், விருப்பம்போல் கூடுதல் விலைக்கு விற்பனை செய் வது அதிகரித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள், உண்டியல், நில குத்தகை, வணிகவளாகம் போன்ற  வகையிலான வருவாய் கொண்டதாக உள்ளன. சில குக்கிராம கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக இருப்பினும், அங்குள்ள சுவாமி படங்கள், பி ரசாதம், பூஜை பொருட்கள் விற்பனை போன்ற ஸ்டால்களுக்கான வருமானமே அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. அளவு, அதிகபட்ச விலை  போன்றவற்றை நிர்ணயித்து, விலைப்பட்டியல் அமைத்து நடத்துவதற்கான உரிமம் ஏல அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.  அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருந்தபோதும், பல இடங்களில் இவற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவு, விலை போன்றவை  கண்டுகொள்ளப்படுவதில்லை. இப்பிரச்னையால் விருப்பம்போல கூடுதல் வசூல் தாராளமாக நடக்கிறது. சில கோயில்களில் பட்டியலில் உள்ள  விலையை சுரண்டியோ, மறைத்தோ அதிக விலைக்கு விற்கின்றனர். விலைப்பட்டியல் இல்லாத சூழலில், விற்பனையாளர் தெரிவிக்கும் கூடுதல்  விலை கொடுத்து பிரசாதம் வாங்க வேண்டிய அவலம் நீடிக்கிறது. ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி மலைக்கோயில் பிரசாத ஸ்டாலில்,  விலைப்பட்டியல் அமைக்காமல் கூடுதல் வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அளவில்  குறைபாடு, கூடுதல் வசூல் குறித்த புகார் இதுவரை இல்லை. பழுது, சேதம் காரணமாக விலைப்பட்டியல் அகற்றப்பட்டிருக்கலாம். இதனை மீண்டும்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar