பதிவு செய்த நாள்
07
டிச
2015
12:12
பாட்னா: பீஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில், ஒன்பது நாட்களுக்கு முன் காணாமல் போன, ஜைன மதத்தின், 24வது தீர்த்தங்கரரான, மஹாவீரர் சிலை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஜமூய் மாவட்டத்தில், ஒன்பது நாட்களுக்கு முன், 250 கிலோ எடையுள்ள, 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மஹாவீரர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவன், கிராமப் பகுதியில்சிலை கிடப்பதாக தகவல் அளித்தான். இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சிலையை மீட்டனர். போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், அந்த சிலையை விற்க சிரமப்பட்ட திருடர்கள், வேறு வழியின்றி சிலை பற்றிய தகவலை அளித்ததாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.இவ்வாறு போலீசார் கூறினர்.