பதிவு செய்த நாள்
23
டிச
2015
11:12
கேரள மாநில நிறுவனம் ஒன்று, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.உதயா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் அடங்கிய இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்து:கேரள மாநிலத்தில் ஊழல் செய்தால், அவர்களை, பொது மக்களே கல்லால் அடிப்பர்; அந்த நிலை தற்போது இல்லை. இதனால், கடவுளின் பூமியாக கருதப்பட்ட கேரளாவிலும், மற்ற மாநிலங்களை போல, சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துள்ளது. கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மட்டும், நேர்மையானவராக இருந்தால் போதாது. அவருக்கு கீழ் பணியாற்றுபவர்களும், நேர்மையானவராக இருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் செயல்பாட்டால், சபரிமலையில் உள்ள புனித நீர் கூட, மாசடைந்து உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -