திருமலைக்கேணி: திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமிக்கும் பால், சந்தனம், பன்னீர், தயிர், தேன், திருமஞ்சணம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.