சங்ககிரி: சங்ககிரி வி.என்.பாளையம் வசந்தவல்லவராய பெருமாள் கோவில் வளாகத்தில், தபால் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி தபால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், மற்றும் வடமாலை, சந்தனகாப்பு, துளசி மாலை உள்ளிட்ட பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.