மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2016 12:01
ப.வேலூர்: ப.வேலூர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று பிற்பகல், 12.27க்கு ராகு பகவான், கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான், மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்ந்தார். இதையொட்டி, நேற்று காலை, 11 மணிக்கு பூஜை துவங்கியது. அடுத்து பால் அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.