பவானிசாகர்: பவானிசாகர் ஒன்றியம் நால்ரோடு அருகே, அம்மாபாளையத்தில் மலையாள பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின், 33ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அம்மாபாளையம், தொப்பம்பாளையம், வெள்ளாளபாளையம், கோடேபாளையம் ஆகிய நான்கு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, கணபதி ஹோமம், அம்மன் திருவீதியுலா நடந்தது. அம்மாபாளையம் கோவிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய ஊர்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.