செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு, சாமி கோவில் உலா நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். வெங்கட்ரமணருக்கு சந்தன காப்பில் மச்ச அலங்காரம் செய்தனர். பகல் 12:00 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணர் கோவில் உலா நடந்தது. இதில் பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டு பஜனை பாடி வந்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. வழக்கறிஞர்கள் ஸ்ரீபதி, வைகை தமிழ் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.