Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீர், நிலவளம் செழிக்க தியாகராஜர் ... செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணமகன் கிடைக்க வேண்டி.. கரட்டுமேட்டில் பூப்பறிக்கும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

சரவணம்பட்டி: மனதுக்குப்பிடித்த மணமகன் கிடைக்க வேண்டி, பூப்பறிக்கும் விழா, சரவணம்பட்டி அருகே கரட்டுமேட்டில் நடந்தது. கோவை சரவணம்பட்டி அருகே ரத்தினகிரி மலை என்றழைக்குப்படும் கரட்டுமேடு உள்ளது. இங்குள்ள குமரக்கடவுள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில், சூரிய வழிபாடு, பொங்கல் வைத்தல், கோமாதா பூஜைகள் நடந்தன. இரண்டாவது நாளில் அலங்கார அபிஷேக பூஜை, தீபாராதனைகள் நடந்தன. 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மாட்டுப்பொங்கலன்று பூப்பறிக்கும் விழா நடந்தது. குரும்பபாளையம், கீரணத்தம், கோவில்பாளையம் உள்ளிட்ட, எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் பூப்பறிக்கும் விழாவில் பங்கேற்கின்றனர். இந்த மலைப்பகுதியில் உள்ள ஆவாரம்பூக்களை பெண்கள் பறித்து குமரக்கடவுளை வழிபட்டால், மனதுக்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது, இந்த மலைப்பகுதியில் ஆவாரம்பூக்கள் மிகவும் குறைவாக உள்ளது. முட்செடிகளும், மரங்களும் வளர்ந்துள்ளன. அதோடு, கோவிலுக்கு வரும் கூட்டமும் அதிகமானதால், பூப்பறிக்கும் விழா பெயரளவிலேயே நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar