விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் புண்ணிய காலமான தை மாதத்தில் , அமாவாசை , வியாதியபாத திதி, திருவோண நட்சத்திரம், திங்கட் கிழமை ஆகியவை இணைந்து வருகிறது. இந்த நாள் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற அதிசய நாளாகும். இதற்கு முன்னர் வருகின்ற சனி பிரதோஷம் சிறப்பு சனி பிரதோஷமாக வழிபாடு செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், கரும்பு ஜீஸ், தேன், சந்தனம், பன்னீர் மற்றும் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மகா தீப ஆராதனை நடந்தது. முன்னதாக புதுச்சேரி சிவனடியார் கல்யாணி அம்மாள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.