பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, நத்தக்கரை செல்வ மகாமாரியம்மன் கோவிலில், நேற்று, தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.
சேலம், ஆத்தூர் அருகே, நத்தக்கரை கிராமத்தில், பழமை வாய்ந்த செல்வ மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 அடி உயரத்தில், புதியதாக தேர் அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4.30 மணியளவில், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி, சுதர்சனம், நவகிரக ஹோம பூஜைகள் நடந்தது. காலை, 11 மணியளவில், தேர் மீது கலசம் வைத்து, பூஜை செய்யப்பட்டது. மதியம், 2 மணியளவில், கோவில் வளாகத்தில் இருந்து, முக்கிய வீதி வழியாக, தேர் வெள்ளோட்ட விழா நடந்தது.