பவானி: பவானி அருகே, சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 8ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடத்திய பின்னர், நேற்று காலை, 9.30 மணிக்கு மேல், கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பவானி, தொட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.