பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
கரூர்: கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மக திருத்தேர் மற்றும் தெப்பத்திருவிழா, வரும், 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிறது.
திருவிழாவை முன்னிட்டு, பிப்., 12ம் தேதி வெள்ளி கருட வாகன உற்சவம், 13ம் தேதி அங்குரார்ப்பணம், 14ம் தேதி பகல், 1 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்கிறது. வரும், 15ம் தேதி காலை இரண்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு சிம்ம வாகன உற்சவம், 16ம் தேதி மூன்றாம் திருநாள் பல்லாக்கு, இரவு வெள்ளி ஹனுமந்த வாகன உற்சவம், 17ம் தேதி காலை நான்காம் நாள் பல்லாக்கு, இரவு வெள்ளி கருட வாகன உற்சவம், 18ம் தேதி காலை ஐந்தாம் திருநாள் பல்லாக்கு, இரவு சேஷ வாகன உற்சவம், 19ம் தேதி ஆறாம் திருநாள் பல்லாக்கு, இரவு யானை வாகன உற்சவம் நடக்கிறது.
அதேபோல், 20ம் தேதி ஏழாம் திருநாள் பல்லாக்கு, மாலை, 4.30 மணிக்கு மேல், 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்பக விமான உற்சவம், 21ம் தேதி எட்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு குதிரை வாகன உற்சவம், 22ம் தேதி திருத்தேர், அதிகாலை, 5.30 மணிக்குள் ரதாரோஷணம், இரவு, 9.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 23ம் தேதி 10ம் திருநாள் பல்லாக்கு அமராவதி நதியில் தீர்த்தவாரி, இரவு கெஜலட்சுமி வாகன உற்சவம் நடக்கிறது.
மேலும், 24ம் தேதி, 11ம் திருநாள் மாலை, 6.30 மணி முதல், 7 மணிக்குள் தெப்ப உற்சவம், இரவு தெப்பத்திற்கு ஸ்வாமி எழுந்தருளி, தெப்பம் சுற்றி வருதல், 25ம் தேதி இரவு கருட வாகன உற்சவம், 26ம் தேதி துளசிபிருந்தா வாகன உற்சவம், 27ம் தேதி கருட வாகன உற்சவம், 28ம் தேதி சேஷ வாகன உற்சவம், 29ம் தேதி ஆளும் பல்லாக்கு, மார்ச், 1ம் தேதி, 17ம் திருநாள் பல்லாக்கு, இரவு ஊஞ்சல் உற்சவம், 2ம் தேதி 18ம் திருநாள், புஷ்ப யாகம் நடக்கிறது.