வில்லியனுார்: வில்லியனுாரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பல்வேறு கோவில்களில் தேவாரம் பாடி அசத்தி வருகிறான். வில்லியனுார் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ஆனந்த்– சங்கீதா தம்பதியின் மகன் திருக்காமீஸ்வரன் (6). இச்சிறுவன் தற்போது மூலக் குளம் மாதா அமிர்தா பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஆடியோ மூலம் தேவாரம் பாடலை கேட்க துவங்கி யது முதல், திருக்காமீஸ்வரன் தேவார பாடல்களை இனிமையாக பாட துவங்கினான். புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழக பகுதியிலும் பல்வேறு சி வாலயங்கள், கோவில் திரு விழாக்கள் மற்றும் கும்பாபிஷேக விழாக்களில் பக்தர்கள் வியக்கும் வகையில் தேவாரம் பாடி அசத்தி வருகின்றான். இதன் மூலம் கிடைத்த அன்பளிப்பு மற்றும் பணம் 85 ஆயிரம் ரூபாயை கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார். சிறுவன் திருக்காமீஸ்வரன் இதுவரையில் சிறுவர் சாதனையாளர், உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.