விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிர÷ தாஷத்தை யொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 5:30 மணிக்கு, நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து 6:00 மணிக்கு தீபாராதனையும், 6:30 மணிக்கு பிரதோஷ நாயகர் உட்பிரகார வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர் மேகநாதன், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை ஆய்வாளர் பொன்னுரங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.