விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி விநாயகர், வள்ளி , தெய் வானை சமேத சுப்ரமணியர், புவனேஸ்வரர், புவனேஸ்வரி மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை ரவிக்குருக்கள் செய்திருந்தார். தர்மகர்த்தா சுப்புராயலு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.