பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
தேனி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா குறித்து தேனி, இடுக்கி கலெக்டர்கள், ஏப்., 5ல் தேக்கடியில் ஆலோசனை நடத்துகின்றனர்.ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு ஏப்., 22ல் சித்ரா பவுர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இக்கோயிலுக்கு செல்லும் தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்கவும், பூஜை செய்வதற்கும் மிகுந்த கெடுபிடியுடன் கேரள அரசு அனுமதிக்கும். கோயிலுக்கு கூடலூரில் இருந்து பளியன்குடி வழியாக பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். குமுளியில் இருந்து தேக்கடி வழியாக ஜீப்பிலும், நடந்தும் செல்வர்.ஆலோசனை திருவிழா ஏற்பாடுகள், பக்தர்களை அனுமதிப்பது குறித்து இருமாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் தேக்கடியில் ஏப்., 5ல் நடக்கிறது. இதில் தேனி கலெக்டர் வெங்கடாசலம், இடுக்கி கலெக்டர் கவுசிகன் , இருமாவட்ட எஸ்.பி.,க்கள், வன அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.