பதிவு செய்த நாள்
09
ஏப்
2016
11:04
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி, சீரடி சாய்பாபா கோவிலில், வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விழா நடக்கிறது. காலை 8.00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 8.30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், 9.00 மணிக்கு, கமல சாய்பாபாவுக்கு புஷ்பாபிஷேகம், 11.45 மணிக்கு, பல்லக்கு உற்சவம், 12.00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. மாலை 7:45 மணிக்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 15ம் தேதி ராமநவமி விழா, காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. பகல் 11:45 மணிக்கு பள்ளக்கு உற்சவம், 12:00மணிக்கு தீபாராதனை, மாலை 6:30 மணிக்கு குழந்தை ராமரை தொட்டியிலிடுதல் வைபவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, சீரடி சாய்பாபா சேவா சாரிட்டபிள் டிரஸ்ட், சீரடி சாய்பாபா சேவா சமிதியினர் செய்துள்ளனர்.