Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணாமலையார் கோவிலில் பஞ்சாங்கம் ... நட்டாற்றீஸ்வரர் கோவிலில் திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
12:04

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கோவிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழைமையான சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்கரன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில், சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள், கருவறையில் உள்ள நேத்ரோ தாரணீஸ்வரர் மற்றும் சத்தியாம்பிகை மீது சூரியக் கதிர்கள் படரும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவதையொட்டி, சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று சித்திரை முதல் நாளையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் உள்ள வினாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், மூலவர் நேத்ரோ தாரணீஸ்வரர், சத்தியாம்பிகை, பனங்காட்டீஸ்வரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 6:04 மணிக்கு சூரியோதம் துவங்கியது. அடுத்த 25 நிமிடத்தில் நேத்ரோ தாரணீஸ்வர் மீதும், அடுத்த 15 நிமிட இடைவெளியில் சத்தியாம்பிகை மீதும் சூரியக் கதிர்கள் படர்ந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜா, தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar