செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள மாரியம்மன், செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மன் கோவில்களில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு தேவதா அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கலச பிரதிஷ்டை மற்றும் சிறப்பு ஹோமமும் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு மகா பூர்ணஹுதியும் 10.30 மணிக்கு செல்லியம்மன், பூவாத்தம்மனுக்கு சர்வாபிஷேகம், கலசாபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. முற்பகல் 11 மணிக்கு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சர்வாபிஷேகம், கலசாபிஷேகமும், 11.50 மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.