பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
02:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில், தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருவிழா, கடந்த வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வெவ்வேறு வாகனத்தில் சுவாமி ராஜவீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நேற்று காலை, 8:00 மணிக்கு நடைபெற்றது.திருத்தேரில், சுந்தராம்பிகை, கச்சபேஸ்வரர் எழுந்தருள, காலை, 8:10 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகளை சுற்றி வந்த தேர், காலை, 10:00 மணிக்கு நிலைக்கு வந்தது. ஞாயிற்று கிழமை காலை, நடராஜர் சிறப்பு தரிசனம், இரவு வெள்ளி ரதம் உற்சவம் நடைபெறும்.