நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் பண்டிகையில், வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திருவிழா நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி வேடமணிந்த பக்தர் அனைவரையும் அசத்தினார். ராமன் லட்சுமணர் வேட்டைக்கு சென்ற காட்சியும், அரக்கர்கள் வேடமணிந்த காட்சியும் தத்ரூபமாக இருந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.