ராமர் தன் தம்பியரோடு காட்சியளிப்பதை பட்டாபிஷேக கோலம் என்பர். இதில் ராமரும் சீதையும் ஆசனத்தில் அமர்ந்திருப்பர். ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் கோயில்களை சித்ரகூடம் என்பர். இதில் சீதையும் ராமரும், லட்சுமணரோடு நின்றபடி காட்சியளிப்பர். வனவாசம் சென்ற காலத்தில் ராமரும் சீதையும் லட்சுமணரோடு இருந்த முக்கிய இடங்கள் இரண்டு. ஒன்று சித்ரகூடம், மற்றொன்று பஞ்சவடி. பஞ்ச வடியில் இருந்து சீதையை ராவணன் தூக்கிச் சென்றதால் அதை முக்கியப்படுத்தி ஓவியங்கள் வரையும் வழக்கமில்லை.