Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பயங்கரவாதிகளுக்கு மனமாற்றம் வேண்டி ... சேஷ வாகனத்தில் ராஜகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றில் கம்பம் விடும் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
11:05

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சியில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களாக மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று, மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவிலில் உள்ள கம்பத்திற்கு பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் மலர்கள் துாவி, சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து செல்லப்பட்டது. கோவிலில் இருந்தும் கடை வீதி வழியாக அமராவதி ஆற்றில் கொண்டு கம்பம் ஆற்றில் விடப்பட்டது. திருவிழாவைக் காண கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இன்று தேதி இரவு, 7 மணிக்கு புஷ்ப விமானம், 27ம் தேதி இரவு, 7 மணிக்கு கருட வாகனம், 28ம் தேதி இரவு, 7 மணிக்கு மயில் வாகனம் ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar