ராட்டையில் நுõல் நுõற்கும்பழக்கமுடையவர் மகாத்மா.அதுபோலவே, அரபுநாட்டில் பெண்கள் ராட்டை சுற்றும் பழக்கம் கொண்டிருந்தனர். வீட்டு வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் வீடுகளில் ராட்டை சுற்றும் சப்தம் கேட்கும். இதைப்பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ராட்டை மனஅமைதியைத் தரும் சாதனம். ராட்டை சுற்றுவது சிறந்த கைத்தொழில், என்றார்கள். பெண்கள் ஓய்வு நேரத்தைவீணடிக்கக் கூடாது. தேவையில்லாமல் துõங்குதல், டிவி பார்த்தல், பிறர் தன்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக அளவுக்கு மீறிஅலங்காரம் செய்தல் ஆகியவற்றுக்குப் பதிலாக, தையல், வீட்டை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். நமக்கு கிடைத்துள்ள நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டும்.