பதிவு செய்த நாள்
21
ஜூன்
2016
11:06
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், பவுர்ணமி கிரிவலம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று முன்தினம் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. பக்தர்கள், மூன்று கிலோ மீட்டர் மலையைச்சுற்றி கிரிவலம் வந்தனர். இதேபோல், பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டியபட்டியில், 300 அடி உயரத்தில், 2.60 கி.மீட்டர் சுற்றளவு கொண்ட பாறையாலான குன்னுடையார்மலை உள்ளது. இந்த மலை உச்சியில், ஆவுடையநாயகி உடனான ஆவுடையலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி விழா முன்னிட்டு, ஆவுடையலிங்கேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு, ஓதுவார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். குன்னுடையார் மலையை சுற்றி, பக்தர்கள் உற்சாகத்துடன் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக கிரிவலம் சென்றனர்.