உடுமலை:உடுமலை புதுப்பாளையம் வீரகாமாட்சி அம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.உடுமலை அருகே புதுப்பாளையம் சித்தி விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், வீரகாமாட்சி அம்மன், நவக்கிரகங்கள் கோவில்களின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.கடந்த 12ம் தேதி இரவு 9.00 மணிக்கு அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வர கொடுமுடி செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 9.00 மணிக்கு தேவர் ஆட்டத்துடன் அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து செல்லுதல்; 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் கலச வழிபாடு,7.00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால வேள்வி நடந்தன. இன்று காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, மாலை 3.30 மணிக்கு கரிக்கோல ஊர்வலம், 5.30 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 9.00 மணிக்கு எண்வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.நாளை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 5.00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, நவகோள்கள் வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. 7.30 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா, கும்பாபிஷேக விழா நடக்கிறது. 8.30 மணிக்கு அன்னம் பாலிப்பு, மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.