கோவை: மணியகாரம்பாளையத்தில் உள்ள கானியப்பமசராயர் கோவிலில், இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கணபதி அடுத்த மணியகாரம்பாளையத்தில் கானியப்பமசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா , கடந்த 6ம் தேதி காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. செப்.,12ம் தேதி வரை கானியப்பருக்கு தினமும் மூன்று கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு 7.00 மணிக்கு கன்னிமார் பூஜையும், நள்ளிரவு 12.00 மணிக்கு மசராயன் அணிக்கூடை மற்றும் வேல் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தன. இன்று காலை 6.00 மணிக்கு கரகம், அணிக்கூடை அழைத்து வருதலும், மதியம் 1.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு மாவிளக்கு எடுக்கப்படுகிறது. நாளை மதியம் 12.00 மணிக்கு மறுபூஜையும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு ம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கானியப்பமசராயர் கோவில் நிர்வாகக் கமிட்டியினர் செய்துள்ளனர்.