சுமார் 150 வருடங்களுக்கு முன் வடநாட்டில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவருக்கு குழந்தை மாரியம்மன் சிலை கிடைத்தது. அதை ஊர்மக்களின் உதவியுடன் திருநெல்வேலி மேலக்கடையநல்லூரில் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். வேறெங்கும் காணாத சிறப்பாக திருவிழாவின் போது அக்னி குண்டம் வளர்க்க பச்சை மரங்களை வெட்டி, குண்டத்தில் போட்டு எரிய வைப்பார்கள். அம்மனின் மகிமையால் பச்சை மரங்களும் கொளுந்து விட்டு எரியும். தீராத வினைகளைத் தீர்த்தும், நோய்களைப் போக்கியும் அன்னை குழந்தை சக்தி மாரியம்மன் அருள்புரிகிறாள். இங்கு நடைபெறும் திருவிழா மிகவும் விசேஷமானதாக உள்ளது.