குன்னுார்: குன்னுாரில் உள்ள கோவில்களில் ஆடிபூர சிறப்பு வழிபாடு நடந்தது. ஆதிபராசக்தி அவதரித்த நாளான ஆடிப்பூரம் நாளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், 508 பாலில் பால் அஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் குணா சாஸ்திரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல தந்திமாரியம்மன் கோவில், துருவம்மன் கோவில், காளியம்மன் கோவில், பவானியம்மன் கோவில், ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.