திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவை முன்னிட்டு (5.8.16) வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்ஸவம், யாக கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிநேகவல்லிதாயார் அருள்பாலித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மாலையில் வெள்ளி ரிஷபவாகனத்தில் சிநேகவல்லி தாயார் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.