பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றியுள்ள, நான்கு மடவளாகத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கரூர், கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில் அலங்காரவள்ளி, சவுந்திரநாயகியுடன் கல்யாண பசுபதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலை சுற்றி நான்கு மாடவீதிகள் உள்ளன. இந்த வீதியில்தான் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வருவது வழக்கம். நான்கு மாடவளாகத்தை சுற்றி, போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், வழிப்பறி செயல்களும் நடக்கிறது. காலை நேரங்களில், கனரக வாகனங்களை கோவிலைச் சுற்றி நிறுத்தி வைத்துள்ளதால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கோவில் அருகில், தொடர்ந்து போலீசார் இருக்கும் வகையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.