திருநெல்வேலி:நெல்லை டவுன் ஹரிஹர குக பஜனை சபாவில் 28ம் தேதி நவராத்திரி விழா பூஜைகள் துவங்குகிறது.நெல்லை டவுன் அம்மன் சன்னதி சிருங்கேரி சாரதா பீடம் ஹரிஹர குக பஜனை சபாவில் 28ம் தேதி முதல் சரந் நவராத்திரி விழா துவங்குகிறது. 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ தேவி மகாத்மியம் பாராயணம் மற்றும் சாரதாம்பாளுக்கு விஷேச பூஜை மற்றும் ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அக்.4ம் தேதி துர்காஷ்டமி அன்று காலை 8 மணி முதல் விஷேச பூஜைகளுடன், சண்டிஹோமம், கன்யா பூஜை, சுவாஷினி பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது.பூஜைகளுக்கு தேவையான பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கலாம் என கமிட்டி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏற்பாடுகளை சபா கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.