ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி கருட சேவை நடந்தது.ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி கருட சேவையை முன்னிட்டு காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆகியவைபவங்களை ரெங்கநாத ஐயங்கார், சம்பத்குமார் ஆகியோர் கட்டளைதாரர் ரவணசமுத்திரம் கிருஷ்ணன் முன்னிலையில் நடத்தினர். மாலையில் சகஸ்ரநாம ஜெபமும்,இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தலும், பின்னர் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாகனத்தில் பெருமாள் கருடசேவை உற்சவமும் நடந்தது.