சிருங்கேரி : சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் சாரதாம்பாளுக்கு சிறப்பு பூஜையுடன் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நேற்று சாரதாம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகமும் அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். இன்றும், நாளையும் ஹம்சவாகன அலங்காரமும், 30ம் தேதி மகேஸ்வரி அலங்காரமும், அக்டோபர் முதல்தேதி மயூர வாகன அலங்காரமும்(கவுமாரி), 2ம் தேதி கருட வாகன அலங்காரமும் (வைஷ்ணவி), 3ம் தேதி சரஸ்வதி வாகன அல்காரமும், 4ம் தேதி மோகினி அலங்காரமும், 5ம் தேதி சிம்மவாகன அலங்காரமும் (சாமுண்டி), 6ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 7ம் தேதி கஜலட்சுமி அலங்காரமும் செய்யப்படுகிறது.விழா நாட்களில் லட்சார்ச்சனை, வீதியுலா, சிறப்பு பூஜை, தீபாரதனை, இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.