உளுந்துார்பேட்டை: நைனார்குப்பம் கல்பட்டு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா செங்குறிச்சி மதுரா நைனார்குப்பம் கல்பட்டு பூர்ணா புஷ்பகலா சமேத அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 14ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நாடிசந்தனம், விசேஷ சன்னதி ேஹாமம், காலை 6:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடந்தது. காலை 7:10 மணிக்கு விமான கோபுரத்திற்கும், 7:25 மணிக்கு மூலஸ்தான அய்யனார் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.