Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சலிங்க கோவில் கும்பாபிஷேக விழா கோயிலுக்கு செல்லும் பாதை அடைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2016
12:11

விருத்தாசலம்: விருத்தாசலம், கம்மாபுரம் கோவில்களில் கந்தர் சஷ்டி விழா நேற்று துவங்கியது. வரும் 5ம் தேதி கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (31ம் தேதி) முதல் மகா கந்தர் சஷ்டி விழா துவங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணியர் சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு இரவு 7:00 மணியளவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் 5ம் தேதி கந்தர் சஷ்டி அன்று இரவு 7:30 மணியளவில் சண்முக சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை அம்மனிடம் சக்தி வேல் வாங்கி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தினசரி மாலை 4:30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. கம்மாபுரம் கம்மாபுரம் சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினசரி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிழ்வாக வரும் 5ம் தேதி காலை 9:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சூலூர்; முத்துக் கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில், குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar