பதிவு செய்த நாள்
16
நவ
2016
11:11
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டியில் உள்ள சின்னேரி வேடியப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 13ல், கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமி சக்தி அழைத்தல், கரகம், பூக்கூடை தீர்த்தக்குடம் அழைத்தல், முளைப்பாலிகை எடுத்தல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலையில், இரண்டாம் கால யாக பூஜையுடன், திரவிய ஹோமம், நாடி சந்தானம், யாத்திர தனம், கோபூஜை, தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சின்னேரி வேடியப்பன் சுவாமி, முத்துவேடியம்மன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபிநாத சுவாமி கோவில் அர்ச்சகர் காந்தி பட்டாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவில், இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் அருள்குமார், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (ஓய்வு) ஜெயராமன், தொழிலதிபர் எழில் மறவன் பழனி யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.