பதிவு செய்த நாள்
29
நவ
2016
02:11
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஜெருசலேம் புனிதப்பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர், தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவராக இருக்க வேண்டும். செல்லத்தக்க பாஸ்போர்ட் வேண்டும். வெளிநாடு செல்ல எவ்வித வில்லங்கமும் இருத்தல் கூடாது. மருத்துவ மற்றும் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயணத்துக்காக, அரசு வழங்கும், 20 ஆயிரம் ரூபாய் நீங்கலாக, மீத தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே, திட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரை சேர்த்து, அதிகபட்சமாக நான்கு பேர் பயணம் மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், 5வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.