அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தகவல் தொடர்பு மையம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2016 12:11
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அஜீஸ்நகரில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தகவல் தொடர்பு மையம் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் பியாரேலால் சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியன்குருசாமி இறைவணக்கம் பாடினார். தகவல் தொடர்பு மைய இணை செயலாளர் சந்தானம் வரவேற்றார். ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் யத்தீஸ்வரி ஆத்மவிகாசப்ரியா அம்பா வாழ்த்துரை வழங்கினார். தகவல் தொடர்பு மையத்தை எம்.எல்.ஏ., குமரகுரு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட கவுரவ தலைவர் கேசவலு, மாநில செயற்குழு உறுப்பினர் சிகாமணிராஜன், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் முரளிதரஅய்யர், மாவட்ட புரவலர் தங்கவேல், துணை தலைவர் அன்பழகன், இணை செயலாளர் சிவபிரகாசம், தொண்டர்படை ஆறுமுகம், பொருளாளர் சங்கரலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு மைய இணை செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.