குருவித்துறை, மண்ணாடிமங்கலம் ஊராட்சி அய்யப்பநாயக்கன்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மொட்டைகேசவபெருமாள் சுவாமிகோயிலில் கும்பாபிஷேகவிழா நடந்தது. 400 ஆண்டு பழமையான இக்கோயிலை பக்தர்கள், கிராமமக்கள் கூடி கும்பாபிஷேக விழா நடத்த திருப்பணிக்குழு தலைவர் சுரேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. திருப்பணிக்குழுவினர் புனிதநீர் நிரப்பிய குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயில் வந்தனர். அங்கு ராமானுஜர்பட்டர் முன்னிலையில் பரிவர்த்தன தெய்வங்களான நன்மைதரும்விநாயகர், பெத்தனசாமி, வைரவர் மற்றும் மூலவர் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் சார்பில் பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.