பதிவு செய்த நாள்
08
டிச
2016
12:12
ஈரோடு: கவுந்தப்பாடி, குண்டத்து காளியம்மன் கோவிலில் இந்தாண்டு பொங்கல் விழா நேற்று துவங்கியது. முனியப்ப சுவாமிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றிரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதல், 19 காலை, 9:00 மணிக்கு சந்தனகாப்பு நடக்கிறது. 20 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், 21 இரவு, 10:30 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல், 22 காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல், 11:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. 24 காலை, 8:30 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை, 6:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது.