பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
பொங்கலூர் : பொங்கலூர் கண்டியன்கோவில் சித்தி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, விநாயகர் வழிபாடு, மாதேஸ்வரசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மங்கள இசை, புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, திரவியஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், பெரிய பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
* அவிநாசி, நாராசா வீதியிலுள்ள, விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் வேத மந்திர பாராயணம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், குரு க்ருபா பக்த ஜனசபா நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.