குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், நான்காவது வாரம் சோமவாரம் வழிபாடு நடந்தது. குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை நான்காம் திங்கள் கிழமை சோமவாரம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விவசாயிகள், தங்கள் வயலில் விளைவித்த தானியங்களை, பொன்னிடும் பாறையிலும். சுவாமி சிலைகளிலும் போட்டு வழிபட்டனர். குளித்தலை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.