பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
சின்னாளபட்டி : திருக்கார்த்திகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, வள்ளி, தெய்வானை சமேத மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விசேஷ அபிஷேகத்துடன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், ஓம்கார விநாயகருக்கு வேதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. நாகாபரண அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன், ஏராளமான பக்தர்கள் 1008 தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயில், குட்டத்துப்பட்டி ஆதி திருமூல லிங்கேஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.