Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி பாதை விநாயகர் கோயிலில் ... இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில் சீரமைப்பு பணியில் கிராம மக்கள் இந்தளூர் மணம்புரீஸ்வர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
12:01

திருத்தணி : திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் புதிதாக சுவாமி சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில் கற்பகாம்பாள் சமேத திருவேட்டீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நடந்தும், கோவில் வளாகத்தில் கற்பக விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், துர்க்கையம்மன், பைரவர், அய்யப்பன் மற்றும் நவக்கிரகங்கள் என, தனித்தனி சன்னிதிகள் உருவாக்கப்பட்டன. சன்னிதிகளில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கலச பூஜை: இதையடுத்து, புதிய சிலைகள் மற்றும் கோவில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலைகள், 101 கலசங்கள் வைத்து நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானம் மற்றும் புதிய சிலைகளுக்கும் கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

சிறப்பு அபிஷேகம்:
தொடர்ந்து, மூலவருக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில், திருத்தணி, அகூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar